கர்நாடகா - மஹாராஷ்டிரா எல்லை பிரச்சனை தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் ஆலோசனை கூட்டம்

December 14, 2022

கர்நாடகா - மஹாராஷ்டிரா எல்லை பிரச்னை தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில், இரு மாநில முதல்வர்களின் ஆலோசனை கூட்டம் இன்று டெல்லியில் நடக்கிறது. கர்நாடகாவின் பெலகாவிக்கு மஹாராஷ்டிரா பல ஆண்டுகளாக உரிமை கொண்டாடுகிறது. பெலகாவி தற்போது கர்நாடகா வசம் இருந்தாலும் அடிக்கடி இரு மாநில எல்லை பகுதிகளில் தகராறு ஏற்படுகிறது. சமீபத்தில், மஹாராஷ்டிராவுக்கு சென்ற கர்நாடக அரசு பேருந்துகள் மீது, அம்மாநிலத்தினர் சிலர் கற்கள் வீசியதால் பதற்றம் ஏற்பட்டது. மேலும், இரு மாநில எல்லை […]

கர்நாடகா - மஹாராஷ்டிரா எல்லை பிரச்னை தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில், இரு மாநில முதல்வர்களின் ஆலோசனை கூட்டம் இன்று டெல்லியில் நடக்கிறது.

கர்நாடகாவின் பெலகாவிக்கு மஹாராஷ்டிரா பல ஆண்டுகளாக உரிமை கொண்டாடுகிறது. பெலகாவி தற்போது கர்நாடகா வசம் இருந்தாலும் அடிக்கடி இரு மாநில எல்லை பகுதிகளில் தகராறு ஏற்படுகிறது. சமீபத்தில், மஹாராஷ்டிராவுக்கு சென்ற கர்நாடக அரசு பேருந்துகள் மீது, அம்மாநிலத்தினர் சிலர் கற்கள் வீசியதால் பதற்றம் ஏற்பட்டது. மேலும், இரு மாநில எல்லை பிரச்னை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் உள்ளது.

இரு மாநிலங்களிலும் பா.ஜ., ஆட்சி தான் நடக்கிறது. கர்நாடகாவில், 5 மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. தற்போது எல்லை பிரச்னையை பெரிதுபடுத்துவதால் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் என்று பா.ஜ., தலைவர்கள் அச்சப்படுகின்றனர். இதையடுத்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கர்நாடகா - மஹாராஷ்டிரா மாநில முதல்வர்களுடன் டெல்லியில் இன்று மாலை முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu