சென்னையில் உள்ள அம்மா உணவகங்கள் மூடப்படாது என மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சியின் மாதாந்திர மாமன்ற கூட்டம் 2வது நாளாக மேயர் பிரியா தலைமையில் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. அந்த கூட்டத்தில் 65 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அப்போது சென்னையில் அம்மா உணவகம் ரூ. 786 கோடி அளவிற்கு நஷ்டத்தில் இயங்கி வருகிறது. நாளொன்றுக்கு ரூ. 500க்கு கீழ் வருமானம் வரும் அம்மா உணவகங்களை உடனடியாக மூட வேண்டும் என்று கணக்கு நிலைக்குழு தலைவர் தனசேகரன் தெரிவித்தார்.
அதற்கு மேயர் பிரியா பதில் அளித்து பேசுகையில், அம்மா உணவகம் நஷ்டத்தில் இயங்கினாலும் தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும். எந்த வார்டுகளில் உள்ள அம்மா உணவகங்கள் மிகவும் மோசமான நிலையில் உள்ளதோ அவை மேம்படுத்தப்படும். அம்மா உணவகங்கள் இப்போது எப்படி செயல்படுகிறேதா அது போலவே செயல்படும் என்று கூறினார்.