கடந்த நிதியாண்டை விட இந்த நிதியாண்டில் 17 சதவீதம் உயர்வாக பயிர் காப்பீடு செய்யப்பட்டுள்ளதாக வேளாண் உழவர் நலத்துறை தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் விவசாயிகள் சம்பா பருவ பயிர் காப்பீட்டை வரும் நவம்பர் 15ஆம் தேதிதக்குள் செய்துகொள்ள தமிழ்நாடு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. சம்பா, தாளடி நெற்பயிரை காப்பீடு செய்யாத பயிர்க்கடன்பெற்ற விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு சென்று உடனடியாக தங்கள் பயிர்களுக்கு காப்பீடு செய்து கொள்ளுமாறு வேளாண்மை மற்றும் உழவர் நலன் துறை அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் கடந்தாண்டு 20.22 லட்சம் ஏக்கர் பரப்பளவு பயிர் காப்பீடு செய்யப்பட்டுள்ள நிலையில் இவ்வாண்டு 23.83 லட்சம் ஏக்கர் பரப்பளவு பயிர் காப்பீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 17 சதவீதம் அதிகமாகும் என்று உழவர் நலத்துறை தெரிவித்துள்ளது.