முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஸ்பெயின் நாட்டிற்கு அரச முறை பயணமாக சென்று இன்று சென்னை திரும்பியுள்ளார்.
முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஸ்பெயின் நாட்டின் பயணத்தை முடித்துக்கொண்டு இன்று சென்னை திரும்பினார். அங்கு விமான நிலையத்தில் அவருக்கு அமைச்சர்கள் உற்சாக வரவேற்பு அளித்ததை அடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில் ஸ்பெயின் பயணம் தனக்கு மிகப்பெரிய சாதனை பயணமாக அமைந்துள்ளது. மேலும் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க நிலவும் உகந்த சூழல்களை முதலீட்டாளர்களுக்கு எடுத்துரைத்துள்ளதாகவும் அதன் மூலம் தமிழ்நாட்டில் பல்வேறு முதலீடுகளை ஈர்த்து விட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து பல முன்னணி நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க முன்வந்துள்ளன. அதன்படி ஹபக் லாய்டு நிறுவனம் 2500 கோடி முதலீடு செய்துள்ளது. இந்த பயணத்தின் மூலம் ஸ்பெயினில் ரூபாய் 3440 கோடி ரூபாய்க்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இனி பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகே தனது வெளிநாட்டு பயணங்கள் இருக்கும் என கூறியுள்ளார்.