சுமார் 4000 ஆண்டுகள் பழமையான உதட்டுச் சாயத்தை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். தென்கிழக்கு ஈரானில், கல்லால் ஆன குப்பி ஒன்றில் சிவப்பு நிற அழகு சாதன பொருள் கண்டுபிடிக்கப்பட்டது. இது உதட்டுச் சாயமாக இருக்கலாம் என ஊகிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. அதில், இது தற்போதைய உதட்டுச் சாயத்தை வெகுவாக ஒத்திருப்பது ஆச்சரியமூட்டும் வகையில் தெரிய வந்துள்ளது. இதுவரை உலகில் கண்டறியப்பட்ட உதட்டு சாயங்களிலேயே இதுவே மிகவும் பழமையானதாக சொல்லப்பட்டுள்ளது. இது தொடர்பான விரிவான தகவல்கள் சயின்டிஃபிக் ரிப்போர்ட்ஸ் என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
ஈரானில் கண்டுபிடிக்கப்பட்ட பழமையான உதட்டுச் சாயத்தில் உள்ள 80% பொருட்கள் சிவப்பு நிறத்தை உருவாக்குவதற்காக சேர்க்கப்பட்டவை. பெரும்பாலும் ஹெமடைட் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும், அதில் மாங்கனித் பிரானிட் போன்ற மினரல்கள் உள்ளன. அது போக, காய்கறிகள் உள்ளிட்ட உயிரி பொருட்களிலிருந்து தயாரிக்கப்பட்ட மெழுகு சேர்க்கப்பட்டுள்ளது. இந்தப் பழமையான உதட்டுச் சாயக் குப்பி Jiroft தேசிய தொல்பொருள் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.