ஆந்திர அமைச்சரவை இலாகா அறிவிப்பு

ஆந்திர மாநிலத்தின் அமைச்சரவை இலாகா அறிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற மற்றும் மக்களவை தேர்தலில் தெலுங்கு தேசம், ஜனசேனா, பாஜக கூட்டணி வெற்றி பெற்றதை அடுத்து அங்கு சந்திரபாபு நாயுடு நான்காவது முறையாக முதல்வர் பதவியேற்றார். அதன் அடிப்படையில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான அமைச்சரவை இலாகா அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி முதல்வர் சந்திரபாபு நாயுடுவிற்கு பொது நிர்வாக துறை மற்றும் சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட துறைகளில் ஒதுக்கப்பட்டுள்ளது. பவன் கல்யாண் துணை முதல்வராகவும் பஞ்சாயத்து ராஜ், […]

ஆந்திர மாநிலத்தின் அமைச்சரவை இலாகா அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற மற்றும் மக்களவை தேர்தலில் தெலுங்கு தேசம், ஜனசேனா, பாஜக கூட்டணி வெற்றி பெற்றதை அடுத்து அங்கு சந்திரபாபு நாயுடு நான்காவது முறையாக முதல்வர் பதவியேற்றார். அதன் அடிப்படையில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான அமைச்சரவை இலாகா அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி முதல்வர் சந்திரபாபு நாயுடுவிற்கு பொது நிர்வாக துறை மற்றும் சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட துறைகளில் ஒதுக்கப்பட்டுள்ளது. பவன் கல்யாண் துணை முதல்வராகவும் பஞ்சாயத்து ராஜ், ஊரக வளர்ச்சித்துறை, ஊரக குடிநீர் விநியோகம், வனத்துறை, சுற்றுச்சூழல், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகள் ஆகியவை ஒதுக்கப்பட்டுள்ளது. அதனை அடுத்து நர லோகேஷ் அவர்களுக்கு மனிதவள மேம்பாடு, ஐடி மற்றும் எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் துறைகளும், அச்சன் நாயுடுவிற்கு விவசாயம், கூட்டுறவு உள்ளிட்ட துறைகளும், உள்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை அமைச்சர் அனிதாவிற்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் சத்திய குமார் யாதவுக்கு சுகாதார துறையும், ஆந்திர நிதியமைச்சர் ஆக பையாலுவா கேசவ் செய்யப்பட்டுள்ளனர். டாக்டர் நிம்மலா நாயுடுவிற்கு நீர்வளத்துறையும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu