ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பாலாற்றில் தடுப்பணை கட்ட ரூபாய் 215 கோடி நிதி ஒதுக்கி உள்ளார்.
ஆந்திராவில் குப்பம் தொகுதியில் பாலாறு குறுக்கே தடுப்பணை கட்டுவதற்காக நிதி ஒதுக்கீடு செய்திருப்பதாக ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்நிலையில் இந்த புதிய தடுப்பணை கட்டுவது தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் செயல் என தமிழக விவசாயிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். ஏற்கனவே கட்டப்பட்ட 22 தடுப்பணைகளால் பாலாறு நதி வறண்டு காணப்படும் நிலையில் கூடுதலாக தடுப்பணை கட்டினால் அதிலிருந்து தமிழகத்திற்கு ஒரு சொட்டு கூட தண்ணீர் கிடைக்க வாய்ப்பு இல்லை எனவும் இதற்கு தமிழக அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.