ஆந்திராவின் ஆர்.பி.கே. திட்டம் தமிழகத்தில் செயல்படுத்த ஆய்வு

September 8, 2022

ஆந்திராவில் செயல்பட்டு வரும், ஆர்.பி.கே., திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்துவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்ள்ளது. ஆந்திராவில் ஆர்.பி.கே. என்று அழைக்கப்படும், 'ரைத்து பரோஷா கேந்திரம்' திட்டத்தை, முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது. இதற்காக, ஒவ்வொரு கிராமத்திலும், விவசாய சேவை மையம் திறக்கப்பட்டு உள்ளது. இங்கு, விவசாயிகளுக்கு தேவையான அனைத்து சேவைகளும் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக, தொடுதிரை கணினிகளும் நிறுவப்பட்டுள்ளன. இந்த திட்டத்திற்கு ஐ.நா. சபையில் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் விருதும் கிடைத்துள்ளது. சர்வதேச […]

ஆந்திராவில் செயல்பட்டு வரும், ஆர்.பி.கே., திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்துவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்ள்ளது.

ஆந்திராவில் ஆர்.பி.கே. என்று அழைக்கப்படும், 'ரைத்து பரோஷா கேந்திரம்' திட்டத்தை, முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது. இதற்காக, ஒவ்வொரு கிராமத்திலும், விவசாய சேவை மையம் திறக்கப்பட்டு உள்ளது. இங்கு, விவசாயிகளுக்கு தேவையான அனைத்து சேவைகளும் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக, தொடுதிரை கணினிகளும் நிறுவப்பட்டுள்ளன.

இந்த திட்டத்திற்கு ஐ.நா. சபையில் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் விருதும் கிடைத்துள்ளது. சர்வதேச அளவில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள இத்திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு விரும்புகிறது. இதற்காக, தமிழக வேளாண்துறை அதிகாரிகள் கொண்ட குழுவினர் ஆந்திரா சென்றுள்ளனர். அங்கு விவசாய சேவை மையங்களின் செயல்பாடு குறித்து ஆய்வு செய்தனர். இதனையடுத்து இத்திட்டம் கூடுதல் வசதிகளுடன் தமிழகத்தில் செயல்படுத்த வாய்ப்புள்ளது.

 

 

 

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu