ஜனவரி 4ம் தேதி கடுமையான சூரிய புயல் பூமியை தாக்கி உள்ளது.
பூமி சூரியனுக்கு அருகில் சுற்றுவட்ட பாதையில் வலம் வருகிறது. எனவே, தற்போதைய சூழலில் ஏற்படும் சூரிய புயல்கள் பூமியை கடுமையாக தாக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று பூமியைத் தாக்கிய சூரிய புயலால், செயற்கைக்கோள் ஒன்று அதன் பாதையில் இருந்து விலகும் படி நேர்ந்தது.
இந்நிலையில், இன்று, ஜனவரி 5ஆம் தேதி, மற்றொரு சூரிய புயல் பூமியை தாக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. இன்று, M -Class சூரிய புயல் தாக்குவதற்கு 30% வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. AR3180 என்ற சூரிய மையப் புள்ளியில் இருந்து இந்த தாக்குதல் ஏற்படலாம் என கூறப்படுகிறது. இது நேரடியாக பூமியை நோக்கிய படி உள்ள சூரியனின் பகுதியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், சூரியனின் துருவப் பகுதிகளில் சக்தி வாய்ந்த வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும், இவை பூமியை நோக்கி வந்தால், தொலைத்தொடர்பு இணைப்புகளை பெருமளவு சேதப்படுத்தும் பேரழிவு நிகழலாம் எனவும், நாசா எச்சரித்துள்ளது.














