வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வால், 2 லாப நோக்கமற்ற தொழில் பூங்காக்களை அமைக்க உள்ளதாக அறிவித்துள்ளார். அதில் ஒன்று அலுமினியத்திற்கும் மற்றொன்று துத்தநாகம் மற்றும் வெள்ளிக்கும் ஒதுக்கப்படுகிறது. இந்த பூங்காக்கள் இந்தியாவின் உற்பத்தி மற்றும் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது.
இந்த பூங்காக்களில் 5 கோடி ரூபாய் வைத்துள்ளவர்கள் முதலீடு செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மற்றும் ஒடிசா மாநிலங்களில் உள்ள வேதாந்தா ஆலைகளுக்கு அருகில் இந்த தொழில் பூங்காக்கள் அமைக்கப்படுகின்றன. சுமார் 1500 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படும் இந்த தொழில் பூங்காக்கள் நடப்பு நிதி ஆண்டில் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.