காவல்துறை மற்றும் சீருடை பணியாளர்களுக்கு அண்ணா பதக்கங்கள் அறிவிப்பு

September 14, 2022

பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு காவல்துறை மற்றும் சீருடை பணியாளர்களுக்கு அண்ணா பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை, சிறைத்துறை, ஊர்க்காவல் படை, விரல்ரேகைப் பிரிவு மற்றும் தடய அறிவியல் துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களை அங்கீகரிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15-ம் நாள் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளன்று தமிழக முதலமைச்சரின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு, காவல்துறையில் முதல் நிலை காவலர் […]

பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு காவல்துறை மற்றும் சீருடை பணியாளர்களுக்கு அண்ணா பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை, சிறைத்துறை, ஊர்க்காவல் படை, விரல்ரேகைப் பிரிவு மற்றும் தடய அறிவியல் துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களை அங்கீகரிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15-ம் நாள் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளன்று தமிழக முதலமைச்சரின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த ஆண்டு, காவல்துறையில் முதல் நிலை காவலர் முதல் காவல் கண்காணிப்பாளர் வரையிலான 100 பணியாளர்கள், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையில் 8 பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள், சிறைத்துறையில் 10 பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள், ஊர்க்காவல் படையில் 5 ஊர்க்காவல் படை அலுவலர்கள், விரல்ரேகைப் பிரிவில் 2 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்களுக்கும் மற்றும் தடய அறிவியல் துறை பிரிவில் 2 பேருக்கும் அவர்களது பணியினை அங்கீகரிக்கும் வகையில் “தமிழக முதலமைச்சரின் அண்ணா பதக்கங்கள்” வழங்கிட முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu