சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 58 பேராசிரியர்கள் தகுதி விதிமுறைப்படி பணியில் சேராமல் இருப்பதாக கூறி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மேலாண்மை துறை மற்றும் வேளாண்மை துறையில் பணியாற்றும் பேராசிரியர்கள் தகுதி விதிமுறைப்படி பணியில் சேராமல் பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் தமிழ்நாடு அரசு உயர் கல்வித் துறை பரிந்துரையின் பெயரில் 58 பேராசிரியர்கள் பணி நீக்கம் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.