முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருவள்ளுவர் தினத்தில் விருதுகளை வழங்கி பெருமைப்படுத்த உள்ளார்.
2025ம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது மற்றும் 2024ம் ஆண்டுக்கான பல முக்கிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில்:
2025ம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது மு.படிக்கராமுக்கு வழங்கப்படுகிறது. 2024ம் ஆண்டுக்கான தந்தை பெரியார் விருது விடுதலை ராஜேந்திரனுக்கும், 2024ம் ஆண்டுக்கான பேரறிஞர் அண்ணா விருது எல்.கணேசனுக்கும், 2024ம் ஆண்டுக்கான அண்ணல் அம்பேத்கர் விருது ரவிக்குமார் எம்.பிக்கும், 2024ம் ஆண்டுக்கான முத்தமிழறிஞர் கலைஞர் விருது முத்து வாவாசிக்கும், மகாகவி பாரதியார் விருது கவிஞர் கபிலனுக்கும், பாவேந்தர் பாரதிதாசன் விருது பேரொளி பொன்.செல்வகணபதிக்கும், தமிழ்தென்றல் திரு.வி.க விருது மருத்துவர் ஜி.ஆர். ரவீந்திரநாத்துக்கும், முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது வே.மு. பொதியவெற்பனுக்கும் வழங்கப்பட உள்ளன. இந்த விருதுகள், வரும் திருவள்ளுவர் தினத்தில் (ஜனவரி 15) ரூ.5 லட்சம் ரொக்கம் மற்றும் ஒரு சவரன் தங்கப்பதக்கத்துடன், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கவுள்ளார்.