கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கும் தேதியை பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கான ஆண்டு தேர்வுகள் முடிவடைந்து மே மாதம் முழுவதும் கோடை விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. இதனை அடுத்து வருகின்ற ஜூன் நான்காம் தேதி பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட உள்ளன. இந்நிலையில் பள்ளிகள் திறப்பு எப்போது என்பது குறித்தான கேள்விக்கு பள்ளிகள் ஜூன் 6ம் தேதி திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வி துறை அறிவித்துள்ளது. இதனிடையே முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி 2024- 25 ஆம் கல்வியாண்டில் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு வரை ஜூன் 6-ம் தேதி அன்று பள்ளிகள் திறக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது