AI தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் நிர்வாக பணியாளர்கள் அதிகளவில் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மாற்றமடைந்த சந்தை சூழ்நிலைக்கு ஏற்ப நிறுவனங்கள் புதிய சீரமைப்பை மேற்கொண்டு வருகின்றன.
AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி செயல்திறனை மேம்படுத்தும் நோக்கில், மைக்ரோசாப்ட் நிறுவனம் தொடர்ந்து தனது நிர்வாக ஊழியர்களை குறைத்து வருகிறது. கடந்த மாதம் 6,000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்ட நிலையில், நேற்று மேலும் 300 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதில் பெரும்பாலானோர் அமெரிக்காவை சேர்ந்தவர்கள். புதிய சந்தை நிலைமைக்கேற்ப நிறுவன வளர்ச்சி தொடர, உள்கட்டமைப்பு மாற்றங்கள் அவசியம் என மைக்ரோசாப்ட் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 2023ஆம் ஆண்டு ஜூன் மாத நிலவரப்படி, மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் 2.28 லட்சம் முழுநேர ஊழியர்கள் இருந்தனர். இந்த தொடர்ச்சியான பணிநீக்கங்கள் IT துறையில் பயமுறுத்தும் சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளன.