பூமியை சுற்றி வரும் மற்றொரு நிலவு

நிலவு பூமியை சுற்றி வலம் வருகிறது. ஆனால், நிலவுடன் சேர்ந்து, 1000 ஆண்டு காலமாக விண்கல் ஒன்று பூமியை சுற்றி வருவதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். Asteroid 2023 FW13 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விண்கல், மற்ற விண்கற்களில் இருந்து வேறுபாடாக அமைந்துள்ளது. இது நிலவைப் போல புவி ஈர்ப்பு விசையால் பூமியை சுற்றி வரவில்லை; மாறாக அடிக்கடி பூமியை சுற்றி காணப்படுகிறது. இந்த விண்கல், சூரியனை சுற்றி வலம் வந்தாலும், பூமிக்கு அருகில் காணப்படுவதால், பூமியை சுற்றி […]

நிலவு பூமியை சுற்றி வலம் வருகிறது. ஆனால், நிலவுடன் சேர்ந்து, 1000 ஆண்டு காலமாக விண்கல் ஒன்று பூமியை சுற்றி வருவதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். Asteroid 2023 FW13 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விண்கல், மற்ற விண்கற்களில் இருந்து வேறுபாடாக அமைந்துள்ளது. இது நிலவைப் போல புவி ஈர்ப்பு விசையால் பூமியை சுற்றி வரவில்லை; மாறாக அடிக்கடி பூமியை சுற்றி காணப்படுகிறது. இந்த விண்கல், சூரியனை சுற்றி வலம் வந்தாலும், பூமிக்கு அருகில் காணப்படுவதால், பூமியை சுற்றி வருவது போல தோற்றம் ஏற்படுகிறது.

இந்த விண்கல், ஒரு 5 மாடி கட்டிடம் போன்ற அளவை கொண்டதாகும். இந்த விண்கல் 100 BC காலத்தில் இருந்து பூமியை சுற்றி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், 3700 ஆம் ஆண்டு வரை, இந்த விண்கல் பூமியை சுற்றி காணப்படும் என்று சொல்லப்பட்டுள்ளது. எனவே, விஞ்ஞானிகள் இந்த விண்கல்லை ‘quasi moon’ அதாவது ‘இரண்டாம் நிலவு’ அல்லது ‘போலி நிலவு’ என்று அழைக்கின்றனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu