சீனாவில் இருந்து மேலும் ஒரு உளவு கப்பல் - இந்தியா எதிர்ப்பு

November 17, 2023

இலங்கை கடல் பகுதியில் சீனாவின் உளவு கப்பல்கள் அவ்வப்போது ஆய்வு பணி என்ற பெயரில் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. இதற்கு இந்தியா அடிக்கடி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது. இந்த கப்பல்கள் அனைத்தும் உயர் தொழில்நுட்பம் கொண்ட உளவு கப்பல்களாக இருப்பதால் இலங்கை கடல் பரப்பில் இருக்கும் பொருளாதார வளம் பற்றி ஆய்வு செய்வதற்காகவே வருவதாக சொல்லப்பட்டு வருகிறது. ஆனால் இவை இந்தியாவை உளவு பார்ப்பதற்காக அடிக்கடி இலங்கை கடல் பகுதிக்கு வருவதாக இந்தியா குற்றம் சட்டி வருகிறது. […]

இலங்கை கடல் பகுதியில் சீனாவின் உளவு கப்பல்கள் அவ்வப்போது ஆய்வு பணி என்ற பெயரில் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. இதற்கு இந்தியா அடிக்கடி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது. இந்த கப்பல்கள் அனைத்தும் உயர் தொழில்நுட்பம் கொண்ட உளவு கப்பல்களாக இருப்பதால் இலங்கை கடல் பரப்பில் இருக்கும் பொருளாதார வளம் பற்றி ஆய்வு செய்வதற்காகவே வருவதாக சொல்லப்பட்டு வருகிறது. ஆனால் இவை இந்தியாவை உளவு பார்ப்பதற்காக அடிக்கடி இலங்கை கடல் பகுதிக்கு வருவதாக இந்தியா குற்றம் சட்டி வருகிறது. மேலும் இந்த சீன கப்பல்கள் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதால் இலங்கைக்கு வர இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஆனால் இலங்கை அரசால் சீன கப்பலை தடுக்க இயலவில்லை. ஏனெனில் இலங்கை அரசு சீனாவிடம் இருந்து அதிக அளவில் பொருளாதார உதவியை பெற்றுள்ளது. கடந்த மாதம் இலங்கை வந்த சீன உளவு கப்பல் இன்னும் திரும்பவில்லை. இந்நிலையில் மீண்டும் ஒரு அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட உளவு கப்பல் இலங்கைக்கு அனுப்ப சீனா இலங்கை அரசிடம் அனுமதி கேட்டுள்ளது. இந்த கப்பல் இலங்கைக்கு வருவதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu