பச்சையாக மாறும் அண்டார்டிகா - அச்சத்தில் விஞ்ஞானிகள்

அண்டார்டிகா பனிக்கட்டி கண்டத்தில் பச்சை நிறம் அதிகரித்து வருவது விஞ்ஞானிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது. எக்ஸெட்டர் மற்றும் ஹெர்ட்ஃபோர்ட்ஷையர் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில், கடந்த 40 ஆண்டுகளில் அண்டார்டிகாவின் தாவர வளர்ச்சி 10 மடங்கு அதிகரித்துள்ளது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பாசி போன்ற தாவரங்கள் பரவலாக பரவி வருகின்றன. 1986-ல் 0.4 சதுர மைல் பரப்பளவில் மட்டுமே காணப்பட்ட தாவரங்கள், 2021-ல் 5 சதுர மைல்களாக அதிகரித்துள்ளது. இந்த அதிவேக மாற்றத்திற்கு காரணம் பருவநிலை மாற்றம்தான். அண்டார்டிகாவில் […]

அண்டார்டிகா பனிக்கட்டி கண்டத்தில் பச்சை நிறம் அதிகரித்து வருவது விஞ்ஞானிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது. எக்ஸெட்டர் மற்றும் ஹெர்ட்ஃபோர்ட்ஷையர் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில், கடந்த 40 ஆண்டுகளில் அண்டார்டிகாவின் தாவர வளர்ச்சி 10 மடங்கு அதிகரித்துள்ளது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பாசி போன்ற தாவரங்கள் பரவலாக பரவி வருகின்றன. 1986-ல் 0.4 சதுர மைல் பரப்பளவில் மட்டுமே காணப்பட்ட தாவரங்கள், 2021-ல் 5 சதுர மைல்களாக அதிகரித்துள்ளது. இந்த அதிவேக மாற்றத்திற்கு காரணம் பருவநிலை மாற்றம்தான்.

அண்டார்டிகாவில் கடந்த ஆண்டு வெப்பநிலை இயல்பை விட 70 டிகிரி பாரன்ஹீட்டிற்கு மேல் உயர்ந்தது. இது இதுவரை பதிவு செய்யப்படாத மிகப்பெரிய வெப்பநிலை மாற்றமாகும். இந்த வெப்பநிலை உயர்வு காரணமாக பனிப்பாறைகள் உருகி, புதிய பகுதிகள் தாவரங்கள் வளர ஏற்ற சூழலாக மாறி வருகின்றன. இந்த மாற்றம் உலகின் மற்ற பகுதிகளிலும் ஏற்படும் காலநிலை மாற்றத்தின் தீவிரத்தை எடுத்துக்காட்டுகிறது. அண்டார்டிகா போன்ற பனிக்கட்டி கண்டத்தில் ஏற்படும் மாற்றங்கள், கடல் மட்டம் உயர்வு, காலநிலை மாறுபாடுகள் போன்ற உலகளாவிய தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதால், இந்த ஆய்வின் முடிவுகள் மிகவும் கவலைக்குரியதாக உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu