ஆன்ட்ஃபின் சிங்கப்பூர், தனது வசம் உள்ள ஜொமாட்டோ பங்குகளை விற்று வெளியேறும் முடிவு எடுத்துள்ளது. உணவு விநியோகத் துறையில் முன்னணி நிறுவனமாக உள்ள ஜொமாட்டோவிற்கு இது பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
ஆன்ட்ஃபின் சிங்கப்பூர், தனது 4.3% ஜொமாட்டோ பங்குகளை ஒரு தொகுப்பாக விற்பனை செய்ய உள்ளது. இந்த விற்பனை மூலம் சுமார் 408 மில்லியன் டாலர் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பங்கிற்கான விற்பனை விலை ரூ.251.68 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி வெளியானதை தொடர்ந்து, ஜொமாட்டோ பங்குகள் சற்று சரிவு கண்டன. இருப்பினும், UBS நிறுவனம் ஜொமாட்டோவின் இலக்கு விலையை ரூ.320 ஆக உயர்த்தியுள்ளது. இதனால் பங்கு மீதான நம்பிக்கை அதிகரித்துள்ளது. CLSA மற்றும் மோதிலால் ஓஸ்வால் நிறுவனங்களும் ஜொமாட்டோவின் இலக்கு விலையை அதிகரித்துள்ளன.