மும்பையில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி கட்டிடங்கள் ரூ.252 கோடிக்கு விற்பனை

March 16, 2023

மும்பையில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி கட்டிடங்கள் ரூ.252 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து ரியல் எஸ்டேட் வட்டாரங்கள் கூறுகையில், கடந்த மாதம் வெல்ஸ்பன் குழுமத் தலைவர் பி.கே.கோயங்காவுக்கு வோர்லி பகுதி டவர் ‘பி’யில் உள்ள 63,64,65-ஆவது தளங்களை வாங்கினார். இவை 30,000 சதுர அடி பரப்பளவை கொண்டவை. ரூ.240 கோடியில் வாங்கப்பட்ட இந்த ஒப்பந்தம்தான் நாட்டின் அதிகபட்ச மதிப்புடைய குடியிருப்பு மனை விற்பனை ஒப்பந்தமாக கருதப்பட்டது. இந்நிலையில் அதனையும் விஞ்சும் வகையில் தெற்கு மும்பையில் ரூ.252 கோடிக்கு […]

மும்பையில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி கட்டிடங்கள் ரூ.252 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து ரியல் எஸ்டேட் வட்டாரங்கள் கூறுகையில், கடந்த மாதம் வெல்ஸ்பன் குழுமத் தலைவர் பி.கே.கோயங்காவுக்கு வோர்லி பகுதி டவர் ‘பி’யில் உள்ள 63,64,65-ஆவது தளங்களை வாங்கினார். இவை 30,000 சதுர அடி பரப்பளவை கொண்டவை. ரூ.240 கோடியில் வாங்கப்பட்ட இந்த ஒப்பந்தம்தான் நாட்டின் அதிகபட்ச மதிப்புடைய குடியிருப்பு மனை விற்பனை ஒப்பந்தமாக கருதப்பட்டது. இந்நிலையில் அதனையும் விஞ்சும் வகையில் தெற்கு மும்பையில் ரூ.252 கோடிக்கு மூன்றடுக்கு மாடி குடியிருப்பு விற்பனையாகி உள்ளது. இங்கு ஒரு சதுர அடி விலை ரூ.1.4 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த குடியிருப்பை வாங்க தொழிலதிபர் நீரஜ் பஜாஜுக்கும், மேக்ரோடெக் டெவலப்பர்ஸுக்கும் (லோதா குழுமம்) இடையே ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்துக்காக ரூ.15 கோடி முத்திரை கட்டணம் செலுத்தப்பட்டுள்ளதாக ரியல் எஸ்டேட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu