ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டதை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு மோடி என்ற பெயரை பயன்படுத்தி சர்ச்சையாக பேசியது தொடர்பான அவதூறு வழக்கில் ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் நீதிமன்றம் நேற்று தீர்ப்பு அளித்தது. அதேநேரம் மேல்முறையீடு செய்யலாம் எனக் கூறி பினை வழங்கியிருந்தது. இதனையடுத்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.