ஐபோன் 14 விற்பனை வரத்து குறைந்து வருவதால் ஆப்பிள் இன்க் தனது புதிய ஐபோன் உற்பத்தியை அதிகரிப்பதற்கான திட்டங்களை இந்த ஆண்டு கைவிடுகிறது.
ஆப்பிள் இன்க் நிறுவனமானது சீனாவிலிருந்து அதன் சில தயாரிப்புகளை இந்தியாவில் உற்பத்தி செய்ய திட்டமிட்டு இ௫ந்தது. அதன்படி இந்த ஆண்டின் இறுதியில் ஐபோன் 14 தயாரிப்பை 6 மில்லியன் யூனிட்கள் வரை உற்பத்தி செய்ய திட்டமிட்டி௫ந்தது. அதாவது ஒரு ஆப்பிள் சப்ளையர் குறைந்த விலை ஐபோன்களில் இருந்து பிரீமியம் மாடல்களுக்கு உற்பத்தி திறனை மாற்றுகிறார். அதே சமயம் அதிக விலை கொண்ட ஐபோன் 14 ப்ரோ மாடல்களுக்கான தேவை , அடிப்படை ஐபோன் மாடல்களை விட குறைவாகவே உள்ளது. இந்நிலையில் ஆப்பிள் இன்க் ஐபோன்கள் 14 ன் உற்பத்தியை குறைக்கும்படி சப்ளையர்களிடம் கூறியதாக ஒ௫ செய்தி அறிக்கை தெரிவித்துள்ளது.
அதற்குப் பதிலாக கலிபோர்னியாவைத் தலைமையிடமாகக் கொண்ட குபெர்டினோ நிறுவனம், இந்தக் ஆண்டில் 90 மில்லியன் கைபேசிகளை உற்பத்தி செய்வதை இலக்காகக் கொண்டுள்ளது. இது ஒரு வருடத்திற்கு முன்பு நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டது என்று செய்தி அறிக்கை வெளியாகியுள்ளது.