இந்தியாவில் உள்ள ஆப்பிள் பயனர்களுக்கு அடுத்த வாரம் முதல் 5ஜி சேவை

November 3, 2022

ஆப்பிள் நிறுவனம், ஐபோன்களில் 5ஜி தொழில்நுட்பத்தை கையாளும் திறன் குறித்து, ‘பீட்டா’ பரிசோதனை கட்டத்தில் உள்ளது. இந்நிலையில், இந்தியாவில் இயக்கப்படும் ஐபோன்களில், பீட்டா பரிசோதனை அடிப்படையில், அடுத்த வாரம் முதல், 5ஜி சேவைகள் அறிமுகம் செய்யப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏற்கனவே, டிசம்பர் மாதத்திற்குள், ஐபோன்களில் 5ஜி தொழில்நுட்பத்தை கையாளும் திறன் மேம்பாடு வழங்கப்படும் என்று ஆப்பிள் நிறுவனம் தெரிவித்திருந்தது. அந்த வகையில் அடுத்த வாரம் அதற்கான பீட்டா பரிசோதனை அடிப்படையிலான 5ஜி அம்சம் வழங்கப்பட உள்ளது. […]

ஆப்பிள் நிறுவனம், ஐபோன்களில் 5ஜி தொழில்நுட்பத்தை கையாளும் திறன் குறித்து, ‘பீட்டா’ பரிசோதனை கட்டத்தில் உள்ளது. இந்நிலையில், இந்தியாவில் இயக்கப்படும் ஐபோன்களில், பீட்டா பரிசோதனை அடிப்படையில், அடுத்த வாரம் முதல், 5ஜி சேவைகள் அறிமுகம் செய்யப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏற்கனவே, டிசம்பர் மாதத்திற்குள், ஐபோன்களில் 5ஜி தொழில்நுட்பத்தை கையாளும் திறன் மேம்பாடு வழங்கப்படும் என்று ஆப்பிள் நிறுவனம் தெரிவித்திருந்தது. அந்த வகையில் அடுத்த வாரம் அதற்கான பீட்டா பரிசோதனை அடிப்படையிலான 5ஜி அம்சம் வழங்கப்பட உள்ளது. இதற்காக, 5ஜி தொழில்நுட்ப சேவைகள் வழங்கும் தொலை தொடர்பு நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றி வருவதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆப்பிள் நிறுவனத்தின் இந்த பீட்டா பரிசோதனையில், 5ஜி தொழில்நுட்பத்தில் ஏற்படக்கூடிய குறைபாடுகள் கண்டறியப்பட்டு, சரி செய்யப்படும். எனவே, ஐ ஃபோன்கள் பயன்படுத்தும் ஏர்டெல் மற்றும் ஜியோ வாடிக்கையாளர்கள், இந்த பீட்டா பரிசோதனையில் பங்கேற்பர். அதற்கான திறன் மேம்பாடு (Software Update) அடுத்த வாரம் வழங்கப்படும். இந்த பரிசோதனை கட்டத்தில், 5ஜி தொழில்நுட்ப சேவைகளை கையாள்வதில் ஏற்படும் சிக்கல்கள், குறைகள் மற்றும் கருத்துகள் போன்றவற்றை வாடிக்கையாளர்கள் நிறுவனத்திற்கு தெரியப்படுத்தலாம். ஐ போன் 14, 13, 12 மற்றும் ஐபோன் எஸ் இ (மூன்றாம் தலைமுறை) மாடல்கள் 5ஜி தொழில்நுட்பத்தை கையாளக் கூடியவை என்பது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu