இந்தியாவில் முதல்முறையாக, மும்பையில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் ஆப்பிள் நிறுவனத்தின் விற்பனையகம் அமைய உள்ளது. இன்று இதற்கான டீசரை நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த விற்பனையகம் ஏப்ரல் மாதத்திற்குள் திறக்கப்படும் என தகவல் வெளிவந்துள்ளது.
மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் டிரைவ் மாலில் ஆப்பிள் விற்பனையகம் அமைய உள்ளது. குறிப்பாக, பாந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸ் பகுதியில் அமைய உள்ளதால், ‘பிகேசி’ என்ற அடைமொழி இணைக்கப்பட்டுள்ளது. மேலும், இதன் வடிவமைப்பு மும்பையில் உள்ள டாக்ஸிக்களை குறிக்கும் வகையில், கருப்பு - வெள்ளை நிறத்தில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், விரைவில் டெல்லியில் இரண்டாவது விற்பனையகத்தை ஆப்பிள் திறக்க உள்ளதாக கூறப்படுகிறது. எனினும், மும்பையில் உள்ள விற்பனையகமே முதன்மை விற்பனையகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இந்திய வாடிக்கையாளர்களை கவரும் விதமாக, ஆப்பிள் மியூசிக் தளத்தில் பிரத்தியேக ப்ளே லிஸ்ட் உருவாக்கப்பட்டுள்ளது.