கார் மற்றும் டிஸ்ப்ளே ஸ்கிரீன் திட்டங்களை நிறுத்தும் ஆப்பிள் - 600 பேர் பணிநீக்கம்

April 5, 2024

கடந்த பிப்ரவரி மாதத்தில், ஆப்பிள் நிறுவனம் 2 முக்கிய திட்டங்களை நிறுத்துவதாக அறிவித்தது. ஒன்று, மின்சார மற்றும் தானியங்கி கார் திட்டம். மற்றொன்று, அடுத்த தலைமுறைக்கான டிஸ்ப்ளே ஸ்கிரீன் வடிவமைப்பு திட்டம். இந்த இரு திட்டங்களும் நிறுத்தப்படுவதால் கலிபோர்னியாவில் 600 பேர் வேலை இழக்கும் சூழல் நேர்ந்துள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் தானியங்கி கார் திட்டம் நிறுத்தப்பட்டதால், சாண்டா கிளாராவில் பெரும்பாலானோர் பணி இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த பிரிவில் பணியாற்றிய குறிப்பிட்ட சில ஊழியர்களுக்கு மட்டுமே ஆப்பிள் […]

கடந்த பிப்ரவரி மாதத்தில், ஆப்பிள் நிறுவனம் 2 முக்கிய திட்டங்களை நிறுத்துவதாக அறிவித்தது. ஒன்று, மின்சார மற்றும் தானியங்கி கார் திட்டம். மற்றொன்று, அடுத்த தலைமுறைக்கான டிஸ்ப்ளே ஸ்கிரீன் வடிவமைப்பு திட்டம். இந்த இரு திட்டங்களும் நிறுத்தப்படுவதால் கலிபோர்னியாவில் 600 பேர் வேலை இழக்கும் சூழல் நேர்ந்துள்ளது.

ஆப்பிள் நிறுவனத்தின் தானியங்கி கார் திட்டம் நிறுத்தப்பட்டதால், சாண்டா கிளாராவில் பெரும்பாலானோர் பணி இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த பிரிவில் பணியாற்றிய குறிப்பிட்ட சில ஊழியர்களுக்கு மட்டுமே ஆப்பிள் நிறுவனத்தின் வேறு பிரிவுகளில் பணி வழங்கப்பட்டுள்ளது. மற்றவர்கள் தங்கள் பணியை இழந்துள்ளனர். டிஸ்ப்ளே ஸ்கிரீன் திட்டமும் ரத்தாவதால், பணி நீக்க எண்ணிக்கை மேலும் உயரலாம் என கருதப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu