கடந்த 2010 ஆம் ஆண்டு முதல், உலகின் முன்னணி கைபேசி விற்பனையாளராக சாம்சங் உள்ளது. முதல் முறையாக, 2023 ஆம் ஆண்டில், சாம்சங்கை பின்னுக்குத் தள்ளி ஆப்பிள் முதலிடம் பிடித்துள்ளது. உலக அளவில் ஐந்தில் ஒரு பங்கு ஸ்மார்ட்போன் விற்பனை ஆப்பிள் நிறுவனத்துடையதாக பதிவாகியுள்ளது. கடந்த ஆண்டில், கிட்டத்தட்ட 235 மில்லியன் அளவில் ஐபோன் ஷிப்மெண்ட் பதிவு செய்யப்பட்டுள்ளது.
உலக அளவில் ஸ்மார்ட்போன் விற்பனையில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் முதலிடம் பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தில், 226.6 மில்லியன் எண்ணிக்கையில் ஷிப்மென்ட் பதிவு செய்யப்பட்ட சாம்சங் நிறுவனம் உள்ளது. சீனாவில் இருந்து வெளியேறி வரும் ஆப்பிள் நிறுவனத்துக்கு, சீன சந்தையில் அதிக வரவேற்பு கிடைக்கவில்லை. எனினும், அதிகமான ஆஃபர்களை கொடுத்த ஆப்பிள் நிறுவனம், விற்பனையில் சாதனை படைத்துள்ளது. ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு அடுத்ததாக, சீனாவின் ஷாவ்மி நிறுவனம் ஸ்மார்ட்போன் விற்பனையில் சாதனை படைத்துள்ளது.