ஆப்பிள் நிறுவனத்தின் புதிய வெளியீடுகளை அறிமுகம் செய்யும் ஆப்பிள் வொண்டர்லஸ்ட் நிகழ்வு நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஐபோன் 15 முதல் ஆப்பிள் வாட்ச் 9 வரை அறிமுகம் செய்யப்பட்டது. இவை உலக அளவில் கவனம் பெற்றுள்ளன.
ஐபோன் 15 கைப்பேசி 6.1 இன்ச் ஸ்கிரீன் அளவிலும் ஐபோன் 15 பிளஸ் 6.7 இன்ச் ஸ்கிரீன் அளவிலும் அறிமுகம் செய்யப்பட்டன. இரண்டுமே யூ எஸ் பி சி டைப் சார்ஜிங் உடன் வெளியாகி உள்ளன. இது தவிர, 48 மெகாபிக்சல் கேமரா உடன் பல்வேறு நவீன அம்சங்கள் இவற்றில் இடம் பெற்றுள்ளன. வரும் செப்டம்பர் 22 ஆம் தேதி முதல், இவற்றின் விற்பனை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்பிள் வாட்ச் 9 நேற்று புதிதாக அறிமுகம் செய்யப்பட்டது. இது ஆப்பிள் நிறுவனத்தின் பிரத்தியேகமான 'siri' அழைப்புகளை ஏற்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், வாட்ச் டிஸ்ப்ளேவை நேரடியாக தொடுவதற்கு பதிலாக, விரல்களை அசைப்பது மூலமாகவே கைபேசி அழைப்புகளை ஏற்கும் திறன் கொண்டதாக இவை வெளியிடப்பட்டுள்ளன. இது தவிர, ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 2 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது 99% புதுப்பிக்கத்தக்க டைட்டானியம் பொருளால் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், 36 மணி நேரத்திற்கு பேட்டரி திறன் உள்ளதாக சொல்லப்பட்டுள்ளது.














