ஆப்பிள் நிறுவனத்தின் இந்திய பிரிவு கிட்டத்தட்ட 48% வருவாய் உயர்வை பதிவு செய்துள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் இந்திய பிரிவு வருவாய் 49322 கோடி ரூபாயாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இது வருடாந்திர அடிப்படையில் 48% உயர்வாகும். கடந்த 2023 ஆம் நிதி ஆண்டில், இந்த வருவாய் உயர்வு பதிவாகியுள்ளது. மேலும், ஆப்பிள் இந்தியா நிறுவனத்தின் லாபம் 77% உயர்ந்து, 2230 கோடி ரூபாயாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், நிறுவனத்தின் மொத்த செலவினங்கள் 44 கோடியாக சொல்லப்பட்டுள்ளது. வருவாய், லாபம் மற்றும் செலவினங்கள் என அனைத்து துறைகளிலும் முந்தைய நிதி ஆண்டை விட 2023 ஆம் நிதி ஆண்டில் மிகப்பெரிய உயர்வை ஆப்பிள் இந்தியா பதிவு செய்துள்ளது.