ஆப்பிள் நிறுவனத்தின் இந்திய விற்பனையகத்தில், 25 கோடியளவில் மாத விற்பனை பதிவு

June 1, 2023

கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்தியாவின் முதல் நேரடி ஆப்பிள் விற்பனையகம் திறக்கப்பட்டது. மும்பை மற்றும் டெல்லியில் இந்த விற்பனையகங்கள் திறக்கப்பட்டன. தற்போது ஒரு மாதம் கழிந்த நிலையில், ஆப்பிள் விற்பனையகங்களின் நிதிநிலை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு மாதத்திற்கு 22 முதல் 25 கோடி ரூபாய் மதிப்பில் விற்பனை பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தீபாவளி போன்ற பண்டிகை கால விற்பனையை விட இரு மடங்கு உயர்வாக சொல்லப்படுகிறது. எனவே, இந்தியாவில் ஆப்பிள் விற்பனையகங்கள் வேகமாக காலூன்றி உள்ளதாக […]

கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்தியாவின் முதல் நேரடி ஆப்பிள் விற்பனையகம் திறக்கப்பட்டது. மும்பை மற்றும் டெல்லியில் இந்த விற்பனையகங்கள் திறக்கப்பட்டன. தற்போது ஒரு மாதம் கழிந்த நிலையில், ஆப்பிள் விற்பனையகங்களின் நிதிநிலை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு மாதத்திற்கு 22 முதல் 25 கோடி ரூபாய் மதிப்பில் விற்பனை பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தீபாவளி போன்ற பண்டிகை கால விற்பனையை விட இரு மடங்கு உயர்வாக சொல்லப்படுகிறது. எனவே, இந்தியாவில் ஆப்பிள் விற்பனையகங்கள் வேகமாக காலூன்றி உள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆப்பிள் விற்பனையகங்களுக்கு பொதுமக்களிடம் மிகுந்த வரவேற்பு காணப்பட்டது. திறப்பு நாளிலேயே, மும்பை ஆப்பிள் விற்பனையகத்தில் 10 கோடி மதிப்பில் விற்பனை பதிவு செய்யப்பட்டது. அதே வேளையில், ஆப்பிள் நிறுவனம் சிறிய அளவிலான தனது கடைக்கு, 40 லட்சம் ரூபாய் மாத வாடகை செலுத்துகிறது. ஆனால், அதைவிட பன்மடங்கு உயர்வாக விற்பனை பதிவாகியுள்ளதால், நிறுவனத்தின் சார்பில் மகிழ்ச்சி தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu