ஆப்பிள் நிறுவனத்தின் புதிய பென்சில் கருவி அறிமுகம்

October 18, 2023

ஆப்பிள் நிறுவனம் தனது புதிய பென்சில் கருவியை அறிமுகம் செய்துள்ளது. இந்த பென்சில் கருவி மூலம், ஆப்பிள் நிறுவனத்தின் அனைத்து வகை ஐ பேட் மாடல்களிலும் எழுதலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சி டைப் யுஎஸ்பி கேபிள் மூலம் இதனை ஐ பேட் கருவிகளில் இணைத்து பயன்படுத்திக் கொள்ளலாம் என ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, பத்தாவது தலைமுறை ஐபேட் பயன்படுத்தும் பயனர்களுக்கு இது மிகவும் பொருத்தமாக இருக்கும் என ஆப்பிள் தெரிவித்துள்ளது. மற்ற வகை ஐபேடுகளில், தொழில்நுட்ப […]

ஆப்பிள் நிறுவனம் தனது புதிய பென்சில் கருவியை அறிமுகம் செய்துள்ளது. இந்த பென்சில் கருவி மூலம், ஆப்பிள் நிறுவனத்தின் அனைத்து வகை ஐ பேட் மாடல்களிலும் எழுதலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சி டைப் யுஎஸ்பி கேபிள் மூலம் இதனை ஐ பேட் கருவிகளில் இணைத்து பயன்படுத்திக் கொள்ளலாம் என ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, பத்தாவது தலைமுறை ஐபேட் பயன்படுத்தும் பயனர்களுக்கு இது மிகவும் பொருத்தமாக இருக்கும் என ஆப்பிள் தெரிவித்துள்ளது. மற்ற வகை ஐபேடுகளில், தொழில்நுட்ப காரணங்கள் காரணமாக, சில அம்சங்கள் கிடைக்கப்பெறாது என விளக்கம் அளித்துள்ளது.டிஜிட்டல் முறையில் எழுதுவது, வரைவது மற்றும் கற்பிப்பது போன்ற பணிகளை எளிமையாக்குவதற்கு, ஆப்பிள் நிறுவனத்தின் பென்சில் கருவி மிகவும் துணையாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது. இது டிஜிட்டல் யுகத்தில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் என்றும் கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu