அண்மையில், ஐஓஎஸ் 17 இயங்குதளத்தை ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டது. தற்போது, இந்த இயங்கு தளத்தின் புதிய மேம்படுத்தலாக ஐஓஎஸ் 17.1 வெளியிடப்பட்டுள்ளது.பிரான்ஸ் நாட்டில் உள்ள ஐபோன் 12 கைபேசிகளில் ஏற்பட்ட கோளாறுகளை சரி செய்யும் விதமாக ஐஓஎஸ் 17.1 வெளியிடப்பட்டுள்ளதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த புதிய மேம்படுத்தப்பட்ட இயங்கு தளத்தில், ஏர் டிராப் அம்சம் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், கைபேசிகள் இணைய இணைப்புக்கு அருகாமையில் இல்லாவிட்டாலும், பயனர்களால் கோப்புகளை அனுப்பவும் பெறவும் முடியும். பிரிட்டன் பயனர்களுக்கு, தங்கள் வங்கி கார்டுகளை இணைக்கும் அம்சம் கொடுக்கப்பட்டுள்ளது. இது தவிர, ஐபோன் 14, ஐபோன் 15 போன்ற புதிய வகை கைபேசிகளில் தங்கள் கைபேசி திரையை ஸ்டாண்ட் பை மோடில் மாற்று அம்சம் கொடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஐஓஎஸ் 17 இயங்குதளத்தில் இயங்கும் ஐ பேட், லேப்டாப் போன்றவற்றுக்கும் சில மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.