ஐபோன் 15 மாடல்களில், இந்தியாவின் சொந்த ஜிபிஎஸ் சேவை நாவிக் இடம்பெறுகிறது

September 14, 2023

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய கைபேசி மாடல் - ஐபோன் 15 வெளியிடப்பட்டுள்ளது. இதில், இஸ்ரோவின் தயாரிப்பில் உருவாக்கப்பட்ட ஜிபிஎஸ் சேவைகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் சொந்த ஜிபிஎஸ் என்று அறியப்படும் ‘நாவிக்’, ஐபோன் 15 ப்ரோ மாடல்களில் இடம் பெற்றுள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் கைபேசிகளில் இந்தியாவின் நாவிக் ஜிபிஎஸ் சேவைகள் கொடுக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் ஆகிய இரு மாடல்களில் மட்டுமே நாவிக் அம்சம் கொடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய கைபேசி மாடல் - ஐபோன் 15 வெளியிடப்பட்டுள்ளது. இதில், இஸ்ரோவின் தயாரிப்பில் உருவாக்கப்பட்ட ஜிபிஎஸ் சேவைகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் சொந்த ஜிபிஎஸ் என்று அறியப்படும் ‘நாவிக்’, ஐபோன் 15 ப்ரோ மாடல்களில் இடம் பெற்றுள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் கைபேசிகளில் இந்தியாவின் நாவிக் ஜிபிஎஸ் சேவைகள் கொடுக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் ஆகிய இரு மாடல்களில் மட்டுமே நாவிக் அம்சம் கொடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சாதாரணமாக, ஐபோன் 15 மற்றும் ஐபோன் 15 பிளஸ் ஆகியவற்றில் நாவிக் அம்சம் இடம்பெறாது என கூறப்பட்டுள்ளது.
ஜிபிஎஸ் என்பது அமெரிக்காவின் தொழில்நுட்பமாகும். அதைப்போலவே, இந்தியா, சொந்தமாக, நாவிக் என்ற பெயரில் செயற்கைக்கோள் இருப்பிட சேவையை வடிவமைத்துள்ளது. இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ இதனை வடிவமைத்துள்ளது. ஐபோன் 15 மாடல்கள் தவிர, ஷாவ்மி, ஒன் பிளஸ், ரியல்மி ஆகிய கைபேசிகளின் குறிப்பிட்ட சில மாடல்களிலும் நாவிக் சேவைகள் இடம்பெற்றுள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu