ஐபோன்களின் இந்திய ஏற்றுமதி மதிப்பு - 10000 கோடியாக உயர்வு

June 20, 2023

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி பதிவாகியுள்ளது. கடந்த மே மாதத்தில், 10000 கோடி ரூபாய் மதிப்பில் இந்திய ஐபோன் ஏற்றுமதி பதிவாகியுள்ளது. இந்திய கைப்பேசி மற்றும் மின்னணு சாதனங்கள் அமைப்பு வெளியிட்டுள்ள தகவலின் படி, கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இந்தியாவின் ஒட்டுமொத்த கைப்பேசி ஏற்றுமதி மதிப்பு 20000 கோடியாக பதிவாகியுள்ளது. இது முந்தைய ஆண்டை விட இரட்டிப்பு வளர்ச்சி ஆகும். முந்தைய ஆண்டில், 9066 கோடி […]

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி பதிவாகியுள்ளது. கடந்த மே மாதத்தில், 10000 கோடி ரூபாய் மதிப்பில் இந்திய ஐபோன் ஏற்றுமதி பதிவாகியுள்ளது. இந்திய கைப்பேசி மற்றும் மின்னணு சாதனங்கள் அமைப்பு வெளியிட்டுள்ள தகவலின் படி, கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இந்தியாவின் ஒட்டுமொத்த கைப்பேசி ஏற்றுமதி மதிப்பு 20000 கோடியாக பதிவாகியுள்ளது. இது முந்தைய ஆண்டை விட இரட்டிப்பு வளர்ச்சி ஆகும். முந்தைய ஆண்டில், 9066 கோடி ரூபாய் அளவில் மட்டுமே ஏற்றுமதி பதிவாகியிருந்தது.

சீனாவில் இருந்து ஆப்பிள் நிறுவனம் மெல்ல மெல்ல வெளியேறி வரும் வேளையில், இந்தியா அதற்கான மிகப்பெரிய உற்பத்தி மையமாக உருவாகி வருகிறது. அதன்படி, குறைந்த காலத்தில் மிக முக்கிய வளர்ச்சியை இந்தியா அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu