ஆப்பிள் நிறுவனத்தின் இரண்டாம் தலைமுறை 'ஹோம்பாட்' அறிமுகம்

January 19, 2023

ஆப்பிள் நிறுவனம் இரண்டாம் தலைமுறை 'ஹோம்பாட்' (HomePod) கருவியை அறிமுகம் செய்துள்ளது. மேலும், வரும் பிப்ரவரி 3 ம் தேதி முதல் சந்தையில் அறிமுகமாகும் இந்த கருவியின் விலை இந்திய மதிப்பில் 32900 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நவீன தொழில்நுட்பம் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த 'ஹோம்பாட்' மூலம், கேட்டல் அனுபவம் பன்மடங்கு மேம்படுத்தப்பட்டுள்ளதாக ஆப்பிள் தெரிவித்துள்ளது. ஹோம்பாட் கருவியை, 16.3 மற்றும் அதற்குப் பிறகான ஐஓஎஸ் வெர்ஷன்களில் இயங்கும் ஐபோன், ஐ பேட் ஆகியவற்றின் மூலம் இயக்க முடியும் […]

ஆப்பிள் நிறுவனம் இரண்டாம் தலைமுறை 'ஹோம்பாட்' (HomePod) கருவியை அறிமுகம் செய்துள்ளது. மேலும், வரும் பிப்ரவரி 3 ம் தேதி முதல் சந்தையில் அறிமுகமாகும் இந்த கருவியின் விலை இந்திய மதிப்பில் 32900 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நவீன தொழில்நுட்பம் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த 'ஹோம்பாட்' மூலம், கேட்டல் அனுபவம் பன்மடங்கு மேம்படுத்தப்பட்டுள்ளதாக ஆப்பிள் தெரிவித்துள்ளது.

ஹோம்பாட் கருவியை, 16.3 மற்றும் அதற்குப் பிறகான ஐஓஎஸ் வெர்ஷன்களில் இயங்கும் ஐபோன், ஐ பேட் ஆகியவற்றின் மூலம் இயக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆப்பிள் மியூசிக்கில் உள்ள 100 மில்லியன் பாடல்களை இந்த கருவி மூலம் கேட்க முடியும் எனவும், ஆப்பிள் 4k டிவியுடன் இதனை இணைத்துக் கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இந்த ஹோம்பாட் கருவி 6 வெவ்வேறு குரல்களை அடையாளம் காணும் திறன் படைத்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, குடும்பத்தினர் ஒவ்வொருவரும் தனித்தனியாக தங்களின் விருப்பங்களை தேர்வு செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வீட்டில் உள்ள பல்வேறு ஸ்மார்ட் வீட்டு உபயோக சாதனங்களை இதன் மூலம் இயக்க முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu