ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் புதிய ஐபேட் மினியை அறிமுகப்படுத்தியுள்ளது. 8.3-இன்ச் லிக்விட் ரெடினா டிஸ்ப்ளே மற்றும் சக்தி வாய்ந்த A17 ப்ரோ சிப் ஆகியவற்றை கொண்டு இந்த புதிய ஐபேட் மினி வெளி வந்துள்ளது. இந்த சிப், மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு பயன்பாடுகளை எளிதில் கையாளும் திறன் கொண்டது குறிப்பிடத்தக்கது.
புதிய ஐபேட் மினியில் 12 மெகாபிக்சல் முன் மற்றும் பின் கேமராக்கள், ஸ்மார்ட் எச்டிஆர் 4 மற்றும் ட்ரூ டோன் ஃபிளாஷ் ஆகியவை இடம்பெற்றுள்ளன. வைஃபை 6E, ஆப்பிள் பென்சில் ப்ரோ ஆகியவற்றை ஆதரிக்கும் இந்த ஐபேட் மினி, அதிகபட்சமாக 512 ஜிபி வரை சேமிப்பகத்தை வழங்குகிறது. நீலம், ஊதா, ஸ்டார்லைட் மற்றும் ஸ்பேஸ் கிரே என நான்கு அழகான நிறங்களில் இந்த ஐபேட் மினி கிடைக்கும். அக்டோபர் 15 முதல் முன்பதிவு செய்யலாம் மற்றும் அக்டோபர் 23 முதல் இந்த ஐபேட் மினியை வாங்கலாம். வைஃபை மாடலின் விலை ரூ.49,900 ஆகவும், வைஃபை மற்றும் செல்லுலார் மாடலின் விலை ரூ.64,900 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.