நேற்று ஆப்பிள் நிறுவனத்தின் லெட் லூஸ் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் பல்வேறு புதிய சாதனங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில், ஐபேட் ப்ரோ சாதனம் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் பல்வேறு நவீன அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
முதல் முறையாக, தனது ஐபேட் சாதனத்தில் ஓ எல் இ டி டிஸ்ப்ளேவை ஆப்பிள் நிறுவனம் வழங்கியுள்ளது. அத்துடன், புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஐ பேட் ப்ரோ சாதனத்தில், 3 நானோ மீட்டரில் உருவாக்கப்பட்ட எம் 4 சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது. புதிதாக பொருத்தப்பட்டுள்ள இந்த ப்ராசசர், இதற்கு முந்தைய பிராசஸர்களை விட அதிவேக செயல்திறன் கொண்டதாகும். அத்துடன், ஐபேட் ப்ரோ சாதனத்தில் பொருத்தப்பட்டுள்ள கேமரா சென்சார் லேண்ட் ஸ்கேப் அடிப்படையில் இயங்கும் தன்மை கொண்டது. 11 மற்றும் 13 இன்ச் அளவுகளில், 2 வேரியண்டுகளில் ஐபேட் ப்ரோ வெளியிடப்பட்டுள்ளது. ஐ பேட் ப்ரோ சாதாரணத்துடன் மேஜிக் கீபோர்ட் மற்றும் ஆப்பிள் பென்சில் ஆகியவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.