வரும் மே 7ம் தேதி ஆப்பிள் நிறுவனத்தின் லெட் லூஸ் நிகழ்வு நடைபெற உள்ளது. இந்த நிகழ்வின் போது, ஆப்பிள் நிறுவனத்தின் பென்சில் ரெண்டர் சாதனம் வெளியிடப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் டிம் குக், நிறுவனத்தின் ஐபேடு சாதனங்களை வெளியிடும் நிகழ்வு மே 7ஆம் தேதி நடைபெற உள்ளதாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இதன் போது, எம் 3 சிப், ஒ எல் இ டி டிஸ்ப்ளே கொண்ட ஐபேட் ப்ரோ சாதனம் வெளியாகும் என கூறப்படுகிறது. அத்துடன், ஐபேட் ஏர் மாடல்கள், மேஜிக் கீபோர்ட் ஆகியவையும் வெளியாகும் எனக் கூறப்படுகிறது. அத்துடன், பென்சில் ரெண்டர் கருவி வெளியாகும் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. டிம் குக் பதிவிட்டுள்ள எக்ஸ் தள காணொளியில், இதன் கிராபிக் டிசைன் திறன்கள் எடுத்துரைக்க பட்டுள்ளன.