ஆப்பிள் நிறுவனத்தின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்கேரி ஃபாஸ்ட் நிகழ்வு நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில், ஆப்பிள் நிறுவனத்தின் பல்வேறு புதிய சாதனங்கள் அறிமுகம் செய்யப்பட்டன.
காணொளி வாயிலாக நிகழ்த்தப்பட்ட ஆப்பிள் ஸ்கேரி ஃபாஸ்ட் 2023 நிகழ்வில், முக்கியமாக, M3 சிப், மேக்புக் ப்ரோ, ஐமேக் ஆகிய சாதனங்களின் அறிமுகம் இருந்தது. குறிப்பாக, M3 சிப், ஆப்பிள் சாதனங்களின் முக்கிய அம்சமாக தெரிவிக்கப்பட்டது. M3 சிப் அல்லது பிராசசர் கொண்டு தயாரிக்கப்பட்ட ஐமேக் மற்றும் மேக் புக் ஆகியவை விரைவில் வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. சுமார் 22 மணி நேரம் பேட்டரி திறன் கொண்ட மேக்புக் ப்ரோ வெளியிடப்பட்டது. இதுவும் எம் 3 சிப் கொண்டு வடிவமைக்கப்பட்டதாகும். அத்துடன், தற்போது உள்ள ஐமேக்கை விட இரு மடங்கு வேகமான செயல் திறன் கொண்ட ஐ மேக் ஒன்று, M3 ப்ராசசர் மூலம் உருவாக்கப் பட்டுள்ளதாகவும், இது விரைவில் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.