ஆப்பிள் போன்களில் 5ஜி தொழில்நுட்பத்தை கையாளும் மேம்படுத்தப்பட்ட மென்பொருள் சேவை - டிசம்பர் மாதம் இந்தியாவில் அறிமுகம்

October 12, 2022

இந்தியாவில், வரும் டிசம்பர் மாதத்தில், ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களில் 5ஜி தொழில்நுட்பத்தை கையாளும் திறன் கொண்டுவரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நெட்வொர்க் சேவை வழங்கும் நிறுவனங்களுடன் ஆப்பிள் நிறுவனம் இணைந்து பணியாற்றி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, எளிமையாக ஒரு சாப்ட்வேர் அப்டேட் செய்வதன் மூலம் ஐபோன்களில் 5ஜி தொழில்நுட்பத்தை கையாள முடியும் என்று கூறப்பட்டுள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 12, ஐபோன் 13 மற்றும் ஐபோன் 14 ஆகியவற்றில் 5ஜி தொழில்நுட்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த […]

இந்தியாவில், வரும் டிசம்பர் மாதத்தில், ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களில் 5ஜி தொழில்நுட்பத்தை கையாளும் திறன் கொண்டுவரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நெட்வொர்க் சேவை வழங்கும் நிறுவனங்களுடன் ஆப்பிள் நிறுவனம் இணைந்து பணியாற்றி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, எளிமையாக ஒரு சாப்ட்வேர் அப்டேட் செய்வதன் மூலம் ஐபோன்களில் 5ஜி தொழில்நுட்பத்தை கையாள முடியும் என்று கூறப்பட்டுள்ளது.

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 12, ஐபோன் 13 மற்றும் ஐபோன் 14 ஆகியவற்றில் 5ஜி தொழில்நுட்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த போன்களில், ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்களின் 5ஜி நெட்வொர்க் பயன்பாட்டை குறித்து ஆப்பிள் நிறுவனம் பரிசோதனை செய்து வருகிறது. அத்துடன், வோடபோன் நிறுவனம் 5ஜி தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்த பின்னர், அதனுடன் ஆப்பிள் நிறுவனம் பரிசோதனையில் இறங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐபோன் 12 மற்றும் அதற்கு மேற்பட்ட மாடல்களில் 5ஜி தொழில்நுட்பத்தில் இயங்கும் திறன் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, அந்த மாடல்களில், தொலைபேசி அழைப்புகளின் தரம், வீடியோக்கள் ஸ்ட்ரீமிங் செய்வது, பதிவிறக்கம் மற்றும் பதிவேற்றத்தின் வேகம் மற்றும் பிற அம்சங்களின் நிலைத்தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் 5ஜி தொழில்நுட்ப பரிசோதனை நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சோதனைகளின் முடிவுகளை கொண்டு, கைபேசி மாடலுக்கு ஏற்றவாறு, டிசம்பர் மாதத்தில், சாப்ட்வேர் அப்டேட் வெளிவரும் என்றும், அதன் பிறகு ஐபோன் பயனாளர்கள் 5ஜி தொழில்நுட்பத்தை எளிதாக பயன்படுத்த முடியும் என்றும் ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu