சிப் தொழில்நுட்ப பயன்பாட்டை சார்ந்து, ஆப்பிள் நிறுவனம், சாஃப்ட் பேங்க் நிறுவனத்தின் கீழ் இயங்கும் ஆர்ம் நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் கால அளவு 2040 ஆம் ஆண்டுக்கு பிறகும் நீள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் பெரும்பான்மையான கைப்பேசிகளில் இயங்கும் கணினி தொழில்நுட்பத்துக்கு பின்னால், ஆர்ம் நிறுவனம் மூளையாக செயல்பட்டுள்ளது. அதன் தொழில்நுட்பங்கள் ஆப்பிள் நிறுவனத்திற்கு உரிமையாக சொல்லப்பட்டுள்ளது. ஆர்ம் நிறுவனத்தின் தொழில்நுட்பத்தை, ஐபோன், ஐபேட், மேக் போன்ற, தனது அனைத்து வகை சாதனங்களிலும் ஆப்பிள் பயன்படுத்தி வருகிறது. ஏற்கனவே, நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ள இரு நிறுவனங்களும், மேலும் ஒரு நீண்ட ஒப்பந்தத்தில் கையெழுத்துட்டு உள்ளன. ஆர்ம் நிறுவனத்தின் ஐபிஓ ஆவணங்களில் இந்த ஒப்பந்தம் தொடர்பான செய்திகள் குறிப்பிடப்படவில்லை. எனவே, இந்த ஒப்பந்தம் ஆகஸ்ட் இறுதி வாரம் அல்லது செப்டம்பர் 5 ஆம் தேதிக்குள் கையெழுத்தாகி இருக்க வேண்டும் என கூறப்படுகிறது.