ஆப்பிள் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 2 டிரில்லியன் டாலருக்கு கீழ் சரிவு

January 5, 2023

ஆப்பிள் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 2 ட்ரில்லியன் டாலருக்கு கீழே சரிந்துள்ளதாக ப்ளூம்பெர்க் அறிக்கை தெரிவிக்கிறது. செவ்வாய்க்கிழமை அன்று ஆப்பிள் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 3.7% சரிந்து, ஜூன் 2021க்கு பிறகான குறைந்தபட்ச அளவை பதிவு செய்தது. இதனால், ஆப்பிள் நிறுவனத்தின் முதலீட்டாளர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். ஆப்பிள் நிறுவனம் மட்டுமல்லாது மைக்ரோசாப்ட், அராம்கோ ஆகிய நிறுவனங்களும் கடந்த வருடத்தில் 2 ட்ரில்லியன் சந்தை மதிப்பு கூட்டணியில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, 2022 தொடக்கத்தில், ஆப்பிள் […]

ஆப்பிள் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 2 ட்ரில்லியன் டாலருக்கு கீழே சரிந்துள்ளதாக ப்ளூம்பெர்க் அறிக்கை தெரிவிக்கிறது. செவ்வாய்க்கிழமை அன்று ஆப்பிள் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 3.7% சரிந்து, ஜூன் 2021க்கு பிறகான குறைந்தபட்ச அளவை பதிவு செய்தது. இதனால், ஆப்பிள் நிறுவனத்தின் முதலீட்டாளர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். ஆப்பிள் நிறுவனம் மட்டுமல்லாது மைக்ரோசாப்ட், அராம்கோ ஆகிய நிறுவனங்களும் கடந்த வருடத்தில் 2 ட்ரில்லியன் சந்தை மதிப்பு கூட்டணியில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, 2022 தொடக்கத்தில், ஆப்பிள் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 3 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை உயர்ந்து, வரலாற்று உச்சத்தை பதிவு செய்தது. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக, ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. சீனாவில் உள்ள உற்பத்தி மையம் மூடப்பட்டதால் இந்த நிலை ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, சீனாவில் இருந்து மற்ற நாடுகளுக்கு உற்பத்தியை மாற்ற ஆப்பிள் நிறுவனம் முனைப்பு காட்டி வருகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu