இந்தியாவில் ஐபோன் 15 கைபேசிக்கான உற்பத்தி தொடங்கியுள்ளதாக பாக்ஸ்கான் நிறுவனம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் பாக்ஸ்கான் ஆலையில் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது.
வரும் செப்டம்பர் 12ஆம் தேதி, புதிய ஐபோன் குறித்த அறிவிப்பு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டுள்ள உற்பத்தி மிக முக்கிய பங்கு வகிக்கிறது. எனினும், உற்பத்தி வேகம், கைபேசியின் இதர பாகங்கள் கிடைப்பதை பொறுத்து அமையும் என பாக்ஸ்கான் தெரிவித்துள்ளது. எனினும், கடந்த மார்ச் மாதத்தை விட அதிக வேகத்தில் கைபேசிகள் உற்பத்தி செய்யப்படும் என கூறியுள்ளது. இது, சீனாவில் நடைபெறும் பெரும்பான்மையான ஐபோன் உற்பத்தியை இந்தியாவுக்கு மாற்றும் ஆப்பிள் நிறுவனத்தின் முக்கிய நகர்வாகும்.