தனது புதிய செயற்கை நுண்ணறிவு மாதிரிகளை உருவாக்க, கூகுள் நிறுவனத்தின் டென்சர் புரொசெசிங் யூனிட் (TPU) சிப்களை ஆப்பிள் நிறுவனம் பயன்படுத்தியுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
கூகுள், தனது தனிப்பட்ட செயற்கை நுண்ணறிவு கருவிகள் மற்றும் சேவைகளுக்காக டென்சர் புரொசெசிங் யூனிட் (TPU) சிப்களை உருவாக்கி வருகிறது. இந்த சிப்கள் செயற்கை நுண்ணறிவு மாதிரிகளை பயிற்றுவிப்பதற்கும் இயக்குவதற்கும் உதவி செய்கின்றன. மிகவும் சிக்கலான செயற்கை நுண்ணறிவு பணிகளுக்கு, என்விடியாவின் சிப்கள் போதுமான வேகத்தை வழங்கவில்லை. இதன் காரணமாகவே, கூகுளின் டென்சர் புரொசெசிங் யூனிட் (TPU) சிப்களை ஆப்பிள் நிறுவனம் பயன்படுத்தியுள்ளது.














