சீன சந்தையில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் விற்பனை மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
சீன சந்தையை பொறுத்தவரை, 2024 ஆம் ஆண்டின் தொடக்கம் முதலே ஐபோன் விற்பனை வீழ்ச்சி அடைந்து வருகிறது. நிகழாண்டின் முதல் ஆறு வாரங்களில், கிட்டத்தட்ட 24% வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்நாட்டின் உள்ளூர் நிறுவனமான ஹூவாய் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருவதால், ஆப்பிள் நிறுவனம் சரிவை சந்தித்து வருகிறது. ஏனெனில், இதே காலகட்டத்தில் ஹூவாய் நிறுவனத்தின் விற்பனையில் 64% வளர்ச்சி பதிவு செய்யப்பட்டுள்ளது. ஐபோன் உற்பத்தி சீனாவை விட்டு வெளியேறியது, ஹூவாய் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு மக்களிடையே கிடைத்து வரும் வரவேற்பு உள்ளிட்ட பல காரணங்கள் இதற்கு சொல்லப்படுகின்றன.