ஆப்பிள் நிறுவனம் தனது செயல்பாடுகளை சீனாவில் இருந்து இந்தியாவுக்கு மாற்றி வருகிறது. இதன் விளைவாக, இந்தியாவில் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் உருவாகும். இதில் 2 லட்சம் நேரடி வேலை வாய்ப்புகள் இந்த நிதி ஆண்டின் இறுதிக்குள் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், ஆப்பிள் நிறுவனத்தின் மேட் இன் இந்தியா திட்டத்தில், 70% வேலை வாய்ப்பு பெண்களுக்கு ஒதுக்கப்படுவதாக தகவல் வெளிவந்துள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் மேட் இன் இந்தியா திட்டத்தில், ஒவ்வொரு நேரடி வேலைவாய்ப்பும் 3 மறைமுக வேலை வாய்ப்பை உருவாக்கும் என்று கூறப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி, ஐபோன் 16 ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் மாடல்களை உற்பத்தி செய்ய தமிழக தொழிலாளர்களுக்கு ஆப்பிள் பயிற்சி அளித்து வருகிறது. பாக்ஸ்கான் நிறுவனம் மூலம் இந்த கைபேசிகள் தொகுக்கப்படுகின்றன.