இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐபோன் 15, ஐபோன் 15 பிளஸ், ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் ஆகிய கைப்பேசிகள் இன்று முதல் விற்பனைக்கு வெளியாகியுள்ளன. இந்தியாவில் டெல்லி மற்றும் மும்பையில் உள்ள ஆப்பிள் நிறுவனத்தின் விற்பனையகங்கள் மற்றும் ஆப்பிள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. இந்த செய்தி வெளியானதால், ஆப்பிள் நிறுவனத்தின் இந்திய சந்தை மதிப்பு உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபோன் கைபேசிகள் வெளியீடு சார்ந்து நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பின் படி, ஆப்பிள் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 2023 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் 7% வரை உயரலாம் என கணிக்கப்பட்டுள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் வெற்றிக்கு, இந்திய சந்தை மிகவும் சாதகமாக இருக்கும் என கருதப்படுகிறது. முன்னதாக, கடந்த காலாண்டில், ஆப்பிள் நிறுவனத்தின் இந்திய விற்பனையில் வரலாற்று உச்சம் பதிவானது குறிப்பிடத்தக்கது.