கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில், ஐபோன் விற்பனை பன்மடங்கு உயர்ந்துள்ளது. அதன் விளைவாக நேற்றைய வர்த்தக நாளில், ஆப்பிள் நிறுவனத்தின் பங்குகள் 5.1% உயர்ந்து 174.2 டாலர்களுக்கு வர்த்தகமானது. இது கடந்த நவம்பர் 30ம் தேதிக்கு பிறகு பதிவான உச்சபட்ச பங்கு மதிப்பு ஆகும். மேலும், 2023 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை ஆப்பிள் பங்குகள் 34% உயர்வை பதிவு செய்துள்ளன.
ஆப்பிள் நிறுவனம் மேலும் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, 90 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான பங்குகளை வாங்கவுள்ளது. மேலும், கடந்த காலாண்டில், நிறுவனத்தின் வளர்ச்சியை முன்னிட்டு, பங்கு ஒன்றுக்கு 4% டிவிடெண்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஒரு பங்குக்கு 24 சென்ட்கள் வரை இருக்கும். இந்தியாவில் நேரடி விற்பனையகங்களை தொடங்கியது மற்றும் விரைவில் ஆப்பிள் நிறுவனத்தின் புதிய மாடல் கைப்பேசிகள் வெளிவரவுள்ளது ஆகியவற்றால், தொடர்ந்து வளர்ச்சி அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.