கல்வியியல் படிப்புகளுக்கான விண்ணப்ப அவகாசம் நீட்டிப்பு

September 13, 2025

இளங்கலை கல்வி (B.Ed.) மற்றும் முதுகலை கல்வி (M.Ed.) படிப்புகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப, அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் பரிந்துரையின் பேரில், சென்னை ராணி மேரி கல்லூரியில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் 2025-26 ஆம் ஆண்டிற்கான இளங்கலை கல்வி (B.Ed.) மாணவர் சேர்க்கைக்கான இணைய விண்ணப்பப் […]

இளங்கலை கல்வி (B.Ed.) மற்றும் முதுகலை கல்வி (M.Ed.) படிப்புகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப, அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் பரிந்துரையின் பேரில், சென்னை ராணி மேரி கல்லூரியில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் 2025-26 ஆம் ஆண்டிற்கான இளங்கலை கல்வி (B.Ed.) மாணவர் சேர்க்கைக்கான இணைய விண்ணப்பப் பதிவு தொடங்கி நடைபெற்றது. முதல் கட்ட கலந்தாய்வுக்குப் பிறகு, அரசு கல்வியியல் கல்லூரிகளில் 49 இடங்களும், அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் 530 இடங்களும் என மொத்தம் 579 இடங்கள் காலியாக உள்ளன. இணையதளத்தில் விண்ணப்பிக்க தவறிய மாணவர்கள் இந்த காலியிடங்களில் சேர ஏதுவாக, இன்று (15-ஆம் தேதி) முதல் வருகிற 30-ஆம் தேதி வரை இணையதள விண்ணப்பப் பதிவு வசதி மீண்டும் செயல்படுத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். சேர்க்கை தொடர்பான கூடுதல் விவரங்களை www.lwiase.ac.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். அதேபோல், முதுகலை கல்வி (M.Ed.) பாடப்பிரிவிலும் காலியாக உள்ள இடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வருகிற 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க தவறிய மாணவர்கள் www.tngasa.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்குமாறு அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu