2026 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கியுள்ளது.
இந்தியாவின் உயரிய விருதுகளான பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்மஸ்ரீ ஆகியவை ஒவ்வொரு ஆண்டு குடியரசு தினத்தன்று அறிவிக்கப்படும். கலை, இலக்கியம், விளையாட்டு, மருத்துவம், சமூகப்பணி, அறிவியல், பொறியியல் உள்ளிட்ட துறைகளில் சிறந்தவர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்படும்.
2026-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்கான விண்ணப்ப பதிவு நேற்று தொடங்கியது. விண்ணப்பிக்க விரும்புவோர் ஜூலை 31-ம் தேதிக்குள் https://awards.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விருதுகள் தொடர்பான விவரங்களை மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணையதளமான https://mha.gov.in மற்றும் https://padmaawards.gov.in தளங்களில் பார்க்கலாம். விருதுகளுக்கான விதிகள் https://padmaawards.gov.in/AboutAwards.aspx என்ற இணைப்பில் வெளியிடப்பட்டுள்ளன.