2026ஆம் ஆண்டு விருதுகளுக்கான விண்ணப்பங்கள் மற்றும் பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன.
கலை, இலக்கியம், இசை, விளையாட்டு மற்றும் பல்வேறு துறைகளில் சாதனைப் படைத்தவர்களுக்கு மத்திய அரசு பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ விருதுகளை வழங்கி கவுரவிக்கும். 2026ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் குடியரசு தினத்தன்று வழங்கப்படும்.
இதற்காக, 2026ஆம் ஆண்டு விருதுகளுக்கான விண்ணப்பங்கள் மற்றும் பரிந்துரைகள் வரவேற்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. விருப்பமுள்ளவர்கள் https://awards.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் கடைசி நாள் ஜூலை 31ஆம் தேதி என்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
1954ஆம் ஆண்டிலிருந்து, பத்ம விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தன்று அறிவிக்கப்பட்டு, ஜனாதிபதியால் வழங்கப்படுகின்றன. இந்த விருதுகளுக்கான தகுதியில் இன, தொழில், பதவி அல்லது பாலின வேறுபாடு இல்லை; அனைத்து நபர்களும் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.